அண்ணாச்சி.. அண்ணாச்சி தாம்ல.. லேப் டாப் வாங்க ரூ 75 ஆயிரம் அள்ளிக்கொடுத்துட்டாருல்ல..! ஒரு மாணவிக்கு கிடச்சிருச்சி.. மற்ற மாணவிகளுக்கு ?

0 770

திருச்செந்தூரில் தனது மேல் படிப்புக்கு லேப் டாப் வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்த மாணவியிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடனடியாக  75 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொடுத்தார். அரசின் இலவச லேப்டாப் திட்டம் ரத்து செய்யப்பட்டதால் லேப்டாப்புக்காக கோரிக்கை மனுவுடன் மாணவர்கள் காத்திருக்கும் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

இடைவிடாத கட்சி பணிக்களுக்கிடையே தனது ஆதரவாளர்களுடன் திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட அடைக்கலாபுரத்தில் கருப்பட்டி காபி குடிப்பதறகாக வண்டியில் இருந்து இறங்கினார் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

காபி குடித்த படியே அமைச்சர் பேசிக் கொண்டிருக்க , அங்கு கோரிக்கை மனுவுடன் வந்த ஆஷா என்ற மாணவி தான் பி.டெக் படித்து வருவதாகவும் தனக்கு லேப் டாப் வாங்க உதவ வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தார்

அப்பா யாரு? என்ன வேலை பாக்குராரு ? என்று விசாரித்த அமைச்சரிடம் அப்பா அந்தோணிராஜ் ,பனைதொழிலாளி என்றதும்... அனிதா ராதாகிருஷ்ணன் லேப்டாப் வாங்க எவ்வளவு செல்வாகும் என கேட்டார், அந்த மாணவி 75 ஆயிரம் ரூபாய் ஆகும் என்று கூறியதும், உதவியாளரிடம் 75 ஆயிரம் பணத்தை எடுத்து வரச்சொல்லி, அந்த மாணவியிடம் கொடுத்தார்

சுற்றி இருந்த கட்சியினர் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அந்த மாணவியிடம் நன்றாக படிக்க வேண்டும் என்றும் இது முதல் அமைச்சர் கொடுக்கிற பணம் ... என்றும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்

மாணவி ஆஷாவுக்கு அமைச்சரை நெருக்கத்தில் பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது... உடனடியாக லேப்டாப் வாங்க பணமும் கிடைத்தது.. இது மகிழ்ச்சியான வரவேற்க தக்க விஷயம். அதே நேரத்தில் இலவச லேப்டாப் திட்டம் ரத்து செய்யப்பட்டதால் , தமிழகம் முழுவதும் தங்கள் உயர்கல்விக்கு லேப்டாப் வாங்க இயலாமல் கையில் கோரிக்கை மனுவுடன் ஏராளமான ஏழை மாணவ மாணவிகள் காத்திருக்கின்றனர் . அவர்களுக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் போல அந்தந்த தொகுதி அமைச்சர்கள் பரந்த மனப்பான்மையுடன் நிதி உதவியை அள்ளிக்கொடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments