தேர்தல் பத்திரம் தொடர்பாக எஸ்.பி.ஐ. தாக்கல் செய்த தகவல்கள் முழுமையாக இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி
தேர்தல் பத்திரம் தொடர்பாக முழுமையான விவரங்களை வழங்குமாறு உத்தரவிட்டும் தேர்தல் பத்திர பிரத்யேக எண்களை தாக்கல் செய்யாதது ஏன்? என பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
நன்கொடையாளர்கள் யார் என அறியும் வகையில் பத்திரங்களின் எண்களை திங்கட்கிழமைக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்ட 5 நீதிபதிகள் அமர்வு, எஸ்.பி.ஐ. தாக்கல் செய்த தகவல்கள் முழுமையாக இல்லை என அதிருப்தி தெரிவித்தது.
தேர்தல் பத்திரத்தைப் பெற்ற அரசியல் கட்சி எது? நன்கொடை அளித்தவர் யார்? என்ற விவரங்களை பொருத்திப் பார்ப்பதற்கு ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திலும் அச்சிடப்பட்ட தனிக் குறியீட்டு எண்கள் அவசியம் என்று கூறிய தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிமன்ற உத்தரவின்படி முழுமையான தகவலை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்
Comments