தமிழ்நாட்டின் வளர்ச்சி, மேம்பாட்டிற்கு திமுக அரசு எதிரியாக உள்ளது - பிரதமர் மோடி

0 436

எனது அன்பார்ந்த தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம் என தமிழில் கூறி கன்னியாகுமரி பாஜக பொதுகூட்டத்தில் பிரதமர் உரை

1991 ஆண்டில் கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி காஷ்மீருக்கு யாத்திரை சென்றேன் - பிரதமர்

தற்போது தமிழக மக்களை சந்திப்பதற்காக காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறேன் - பிரதமர்

நாட்டை துண்டாட நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துள்ளனர்; அதேபோல் தமிழ்நாட்டிலும் மக்கள் செய்வார்கள் - பிரதமர்

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழ்நாடு அடக்கும் - பிரதமர்

தமிழ்நாட்டில் இண்டியா கூட்டணி எடுபடாது; திமுக-காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும் - மோடி

திமுக-காங்கிரஸ் இண்டியா கூட்டணி தமிழ்நாட்டில் எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது - மோடி

திமுக-காங்கிரஸ் இண்டியா கூட்டணியின் கொள்கையே ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிப்பது தான் - மோடி

காங்கிரஸ் ஆட்சியில் முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்குவதிலும் கூட ஊழல் செய்தார்கள் - மோடி

கன்னியாகுமரி மாவட்ட மக்களை எப்படியெல்லாம் சுரண்டலாம் என திமுக-காங்கிரஸ் இணைந்துள்ள இண்டியா கூட்டணி காத்துக் கொண்டிருக்கிறது - மோடி

மார்த்தாண்டம், பார்வதிபுரத்தில் மேம்பாலங்கள் வேண்டும் என்ற குமரி மக்களின் பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம் - மோடி

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் குமரி மக்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை; பாஜக அரசு வந்த பிறகு தான் கோரிக்கை நிறைவேற்றம் - மோடி

இரட்டை ரயில் பாதை வேண்டும் என்ற குமரி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையை திமுக-காங். கூட்டணி நிறைவேற்றவில்லை - மோடி

துறைமுகம் வளர்ந்தால் தான் நாடு முன்னேறும்; அந்த வகையில், தூத்துக்குடியில் வ.உ.சி துறைமுக மேம்பாட்டு திட்டங்கள் தொடக்கம் - மோடி

கன்னியாகுமரி மக்களுக்கு மத்திய பாஜக அரசு பல்வேறு திட்டங்களை கொடுக்கிறது; ஆனால், மாநில அரசு அவர்களை வஞ்சிக்கிறது - மோடி

மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஜோ.டி.குரூஸ் ஆற்றிய பணிகளை மனதார பாராட்டுகிறேன் - பிரதமர் மோடி

தமிழ்நாட்டின் வளர்ச்சி, மேம்பாட்டிற்கு திமுக அரசு எதிரியாக உள்ளது - பிரதமர்

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் பாஜக கூட்டணி அரசு தான் ஜல்லிக்கட்டை கொண்டுவந்தது - மோடி

ஜல்லிக்கட்டிற்கு தடை ஏற்பட்டபோது, திமுகவும், காங்கிரசும் வாய்மூடிக் கொண்டிருந்தன - பிரதமர்

தமிழ்நாட்டில் அயோத்தி ஸ்ரீராமர் கோயில் குடமுழுக்கை டிவியில் காட்ட கூட திமுக அரசு தடை விதித்தது - மோடி

குமரி மக்களின் அன்பும், பாசமும் மொத்த இந்தியாவுக்கும் பலம் தருகிறது - பிரதமர்

தமிழர்களின் பெருமையை புறக்கணிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் - மோடி சூளுரை

இலங்கை கடற்பகுதியில், யார் செய்த தவறுக்காக மீனவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும் - மோடி

கன்னியாகுமரியில் ஏற்பட்டிருக்கும் ஆதரவு அலையைப் பார்த்து, டெல்லியில் எதிர்க்கட்சிகளுக்கு தூக்கம் கெட்டுவிட்டது - மோடி

திமுக, காங்கிரஸ் செய்த தப்புக்கும், பாவத்திற்கும் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது; அவர்கள் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும் - மோடி

பாஜக அரசு பெண்களுக்கான அரசு; பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசு; இண்டியா கூட்டணிக்கு மகளிரை ஏமாற்ற மட்டும் தான் தெரியும் - மோடி

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகிறது - பிரதமர்

நமோ என்ற செயலி மூலம் என் பேச்சை தமிழில் கேட்கலாம் - பிரதமர்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நமோ செயலி மூலம் என் பேச்சை தமிழில் கேட்கலாம் - பிரதமர்

மனதின் குரல் நிகழ்ச்சி போன்று, நமோ செயலி மூலம் என் பேச்சை, உரைகளை தமிழில் கேட்கலாம் - பிரதமர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments