மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி
நெற்றி மற்றும் மூக்குப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.
அவரது நெற்றியில் 3 தையல்களும் மூக்கில் ஒரு தையலும் போடப்பட்டுள்ளதாக எஸ்.எஸ்.கே.எம் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர். யாரோ பின்னாலிருந்து தள்ளிவிட்டுதான் மம்தா பானர்ஜி கீழே விழுந்திருக்க வேண்டும் என மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மருத்துவமனை கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியும் கேட்காமல் தாம் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி மம்தா பானர்ஜி சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். வீட்டில் ட்ரெட்மில்லில் நடக்கும்போது தவறி கீழே விழுந்துவிட்டதாகவும் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments