குழந்தை கடத்த வந்ததாக நினைத்து இளைஞருக்கு தர்ம அடி

0 439

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவரங்கம் கிராமத்தில், குழந்தை கடத்த வந்ததாக நினைத்து பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞரை மின் கம்பத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் கண்மூடித்தனமாகத் தாக்கினர்.

செம்படை கிராமத்தைச் சேர்ந்த குமார், பக்கத்து கிராமத்தில் உள்ள கரும்பு தோப்பு அருகே கண்ணி வைத்து கீரிப்பிள்ளை பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. அங்கு கரும்பு சாப்பிட வந்த 2 குழந்தைகளை குமார் விரட்டியபோது, குழந்தைகள் பயத்தில் கத்தியதை கேட்டுவந்த கிராம மக்கள், குமாரை பிள்ளை பிடிப்பவர் என நினைத்து கண்மூடித்தனமாகத் தாக்கினர்.

காயமடைந்த இளைஞரை மீட்ட போலீசார், அவரது பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் அனுப்பிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments