100 கிலோ ராகியில் 2 கிலோ போதை வஸ்து... ஜாபரின் ஜரூர் கடத்தல்..! குடோன்களில் அதிரடி ரெய்டு

0 591

சென்னையில் இருந்து மசாலா , சத்துமாவு உள்ளிட்ட உணவு பொருட்களின் பாக்கெட்டுகளில் மறைத்து சூடோபெட்ரின் போதை பொருளை கடத்திய ஜாபர் சாதிக்கின் முக்கிய கூட்டாளியான சதானந்தம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போதை பொருளை பாக்கெட் போட்ட குடோன்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கூட்டாளி சாதானந்தம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை மற்றும் திருச்சியில் போதை பொருட்களை பதுக்கி வைத்து பாக்கெட் போட பயன்படுத்தப்பட்ட குடோன்களில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்

3500 ரூபாய் வாடகையில் பெருங்குடியில் காம்பவுண்டு வீடு ஒன்றை எடுத்து, அந்த வீட்டை குடோன் போல பயன்படுத்தி தான் போதை பொருளை சிறு சிறு பாக்கெட்டுகளாக்கி சத்துமாவு பாக்கெட்டுக்குள் அடைத்து வெளி நாடுகளுக்கு கடத்தியதாக கூறப்படுகின்றது. அங்கு நீண்ட நேரம் சோதனை நடத்தப்பட்டது. அதாவது 98 கிலோ ராகி மற்றும் கோகோ பவுடரை கொள்முதல் செய்து அதனுடன் 2 கிலோ சூடோபீட்ரைனை கலந்து ஜாஃபர் சாதிக்கின் ஆட்கள், 100 பொட்டலங்கள் அடங்கிய பார்சல்களில் இரண்டு கட்டுகளாக மறைத்து, ரயில் மூலம் டெல்லிக்கு அனுப்பியதை போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் உறுதி செய்தனர்.

வீட்டிலேயே பேக்கேஜிங் செய்யப்பட்டு, தனியார் வாகனங்கள் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஏஜென்ட் மூலம் ரயிலில் டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்றும் திருச்சியிலும் இதே முறையில் பேக் செய்யப்பட்டு சாலை வழியாக சென்னைக்கு கொண்டுவரப்பட்டு ரெயிலில் டெல்லிக்கு அனுப்பட்டுள்ளது. இந்த சோதனையில் ஒரு பை மற்றும் ஒரு பெட்டி, வெயிட் போடும் மிஷின், பேக்கிங் மிஷின், போட்டோஸ் குறிப்பிட்ட ஆவணங்களை எடுத்துச் சென்றதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டுக்கு பூட்டு போட்டதுடன் வீட்டின் உரிமையாளிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே சதானந்தத்தை ஒரு நாள் காவலில் எடுத்து என்.சி.பி அதிகாரிகள் விசாரித்து வருவதால் போதை கடத்தல் சம்பவத்தில் கூடுதல் தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments