பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களில் அதிக அளவில் ரசாயனம் கலப்பு.. பல்வேறு ஆய்வுகளை சுட்டிக்காட்டி நார்வே பல்கலை சுற்றுச்சூழல் துறை தகவல்
உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் அதிகரித்து வருவது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளதாக நார்வே நாட்டு பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
உணவு பேக்கேஜிங் முதல் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகள், மருத்துவ சாதனங்கள் என பிளாஸ்டிக் பொருட்கள் ஒவ்வொன்றிலும் பல ஆயிரம் வகையான ரசாயனங்கள் கலந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் உருவாகும் 40 கோடி டன் பிளாஸ்டி கழிவுகள் குடிநீர் மற்றும் உணவில் கலப்பது மிகமிக அதிகமாக உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments