தி.மு.க கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில், 6-ல் சிக்கல் என தகவல்
திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, திருச்சி, ஆரணி, கரூர் ஆகிய தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்ட வேட்பாளர்களை மாற்றவேண்டும் அல்லது வேறு தொகுதிகளை பெற்றுக்கொள்ளுங்கள் என காங்கிரஸுக்கு தி.மு.க தலைமை கறார் காட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், தி.மு.க சொல்லும் தகவல் தவறானது என்றும், இதை நம்ப வேண்டாம் என்றும் சீட் மறுக்கப்பட்டுள்ளவர்கள் மேலிடத்திற்கு தகவல் அனுப்பி, தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனால், தி.மு.க.விடமிருந்து எந்தெந்த தொகுதிகளை கேட்டுப்பெறுவது என்ற குழப்பத்தில் தமிழக காங்கிரஸார் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திருவள்ளூர் தொகுதியில் புதுமுகத்தை களமிறக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், சிவகங்கை, திருச்சி, கிருஷ்ணகிரி, ஆரணி ஆகிய தொகுதி விவகாரம் குறித்து என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் குழப்பத்தில் அக்கட்சித்தலைமை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் தான் போட்டியிட்ட கரூர் தொகுதிக்கு பதிலாக, இந்த முறை திண்டுக்கல் தொகுதி கிடைக்கும் என ஜோதிமணி எதிர்பார்த்த நிலையில், திண்டுக்கல் தொகுதி சி.பி.எம்-க்கு ஒதுக்கப்பட்டதால், மீண்டும் கரூர் தொகுதியே தனக்கு ஒதுக்க வேண்டும் என ஜோதிமணி தரப்பில் வலியுறுத்திவருவதாக கூறப்படுகிறது.
Comments