2029ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ராம்நாத் கோவிந்த் குழு - முக்கிய பரிந்துரைகள்

0 301

2029ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரைத்துள்ள ராம்நாத் கோவிந்த் குழு, அதற்கான வழிகாட்டுதல்களையும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இதன்படி, மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது முதல் படி என்றும் 100 நாட்களுக்குள் ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவது இரண்டாவது படி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதுள்ள தேர்தல் நடைமுறையால், நீண்ட கால நடத்தை விதிகள் அமல், திட்டப் பணிகள் முடக்கம், ஆசிரியர்களுக்கு அடிக்கடி தேர்தல் பணி, கூடுதல் செலவு, குற்றச்செயல்கள் ஆகியவற்றை சந்திக்க வேண்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ள குழுவினர், ஒரே தேர்தல் முறை மூலம் வெளிப்படைத்தன்மை, வாக்காளர் நம்பிக்கையை அதிகரிப்பது போன்றவை ஏற்படும் என தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments