குழந்தை கடத்தல் எச்சரிக்கை என காவல்துறை பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்

0 405

நெல்லையில் குழந்தை கடத்தல் குறித்து காவல்துறையின் பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டி வதந்தியைப் பரப்புவதாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.

காவல்துறையின் பெயரில் ஊர் மக்களில் சிலரே இதை அச்சிட்டு ஒட்டி உள்ளனர் என்றும் சிவந்திபட்டி காவல்துறையினர் அவர்களை கைது செய்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது என்றும் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அதன் x வலைதள பக்கத்தில்  பதிவு செய்திருக்கிறது .

மேலும் தூத்துக்குடி மாணவனை கடத்த முயன்றதாக பரவிய வீடியோவில் இருக்கும் தகவல் உண்மையானது அல்ல என்றும் சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments