வெற்றிகரமாக சோதனை செய்துள்ள அக்னி 5 ஏவுகணையின் திட்ட இயக்குநராக பெண் விஞ்ஞானி ஷீனா ராணி
திவ்யாஸ்திரா என்ற பெயரில் இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ள அக்னி 5 ஏவுகணையின் திட்ட இயக்குநராக ஷீனா ராணி என்ற பெண் விஞ்ஞானி பணியாற்றியுள்ளார்.
ஹைதராபாத் ஏவுகணை தயாரிப்பு மையத்தில் 1999 முதல் பணியாற்றும் இவர், இந்த ஆண்டில் 25ஆவது ஆண்டை நிறைவு செய்யும் நிலையில், ஒரே நேரத்தில் பல ஆயுதங்களை தாங்கிச் சென்று இலக்கை துல்லியமாக தாக்கக்கூடிய அக்னி 5 ஏவுகணையை தனது தலைமையின்கீழ் வெற்றிகரமாக தயாரித்துள்ளார்.
ஏவுகணை மனிதரான, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல்கலாமின் பணிகள் தனக்கு தூண்டுதலாகவும் ஊக்கமளிப்பதாகவும் ஷீனா தெரிவித்தார்.
திவ்யாஸ்திராவை வடிவமைத்த DRDOவின் திவ்யாபுத்ரியாக இவர் பெயர் பெற்றுள்ளார்.அக்னி ஏவுகணைகள் முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றிய அக்னி புத்ரியான டெஸ்ஸி தாமஸை பின்பற்றியவரான 57 வயது ஷீனாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Comments