கூடுதலாக சாம்பார் பாக்கெட் கேட்டு தர மறுத்ததால் ஓட்டல் சூப்பர்வைசரை அடித்து கொன்ற தந்தை, மகன் கைது

0 526

ஓட்டலில் இட்லி பார்சல் வாங்கிக் கொண்டு கூடுதலாக சாம்பார் பாக்கெட் கேட்டு தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறில் சூப்பர்வைசரை கையால் அடித்து கொலை செய்த தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, பல்லாவரம், பம்மல் பிரதான சாலையில் உள்ள அடையார் ஆனந்தபவன் ஓட்டலுக்கு வந்த சங்கரும், அவரது மகன் அருண்குமாரும் கூடுதலாக சாம்பார் கேட்டதற்கு, சூப்பர்வைசர் அருண் தர மறுத்ததால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், வாடிக்கையாளர் முன்பாகவே சங்கரும், அருண்குமாரும், சூப்பர்வைசர் அருணை தலை, நெற்றி உள்பட பல இடங்களில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் அருண் நிலைகுலைந்து மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையல், ஓட்டல் தற்போது மூடப்பட்டுள்ளது. உயிரிழந்த அருணுக்கு அண்மையில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments