சி.ஏ.ஏ. அகதிகளுக்கு குடியுரிமையை கொடுக்கும் சட்டம் தானே தவிர பறிக்கும் சட்டம் அல்ல- அண்ணாமலை

0 313

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மக்களை குழப்பி திசைதிருப்பும் வேலையை தமிழகத்தில் சில கட்சிகள் செய்வதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, குடியுரிமை திருத்த சட்டத்தில் எந்த வரி இஸ்லாமியர்களின் குடியுரிமையை நீக்குவோம் என கூறியுள்ளது என்று வினவினார்.

சி.ஏ.ஏ. அகதிகளுக்கு குடியுரிமையை கொடுக்கும் சட்டம் தானே தவிர பறிக்கும் சட்டம் அல்ல என்று குறிப்பிட்ட அண்ணாமலை, குடியுரிமை திருத்த சட்டம் யாருக்கு எதிராது என்பதை தமிழக கட்சிகள் கூற வேண்டும் என்றார்.

பாகிஸ்தானில் எத்தனை இந்துக்கள் கோயில்களில் நிம்மதியாக சாமி கும்பிடுகின்றனர் என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, இந்தியாவுக்கு வந்த தஸ்லிமா நஸ்ரின், சல்மான் ருஷ்டி போன்ற இஸ்லாமியர்கள் நாகரீகமாக, சமமாக நடத்தப்படுவதாக குறிப்பிட்டார்.

அட்டவணையில் உள்ள 22 இந்திய மொழிகளில் ஒன்றை பேசும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று கூறிய அண்ணாமலை, இலங்கையில் இருந்த வந்த அகதிகள் அனைவருக்கும் சட்டத்துக்கு உட்பட்டு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என்று முதலமைச்சர் கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு, ஸ்டாலினுக்கு குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்த என்ன அதிகாரம் உள்ளது என்று அண்ணாமலை வினவினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments