பா.ஜ.கவோடு இணைந்தது சரத்குமாரின் ச.ம.க... இது நாட்டின் எழுச்சிக்கான தொடக்கம்: சரத்குமார்

0 365

பிரதமர் மோடியுடன் சேர்ந்து வலிமையாக செயல்பட்டால் என்ன என்கிற எண்ணத்தில் தான் சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.கவேடு இணைத்ததாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது ச.ம.கவின் முடிவல்ல, ஒரு நாட்டின் எழுச்சியின் தொடக்கம் எனத் தெரிவித்த சரத்குமார், பெருந்தலைவர் காமராஜரைப் போன்று ஒரு ஆட்சியை பிரதமர் மோடியால் தான் தர முடியும் எனவும் கூறினார்.

சென்னை தியாகராய நகரில் ச.ம.க அலுவலகத்தில் நடைபெற்ற இணைப்பு விழாவில் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, சரத்குமாரை தமிழ்நாட்டில் அடைத்து வைக்க விரும்பவில்லை எனவும் அவர் தேசியத்திற்கு தேவைப்படுவதாகவும் கூறினார்.

சமத்துவ மக்கள் கட்யினரை பாஜக சொந்தங்கள் இருகரம் கொண்டு வரவேற்பதாகவும் அண்ணாமலை கூறினார்.

சரத்குமாரின் முடிவை வரவேற்பதாக அவரது கட்சியின் நிர்வாகிகள், தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments