பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை தோற்கடிக்க முடியாது: அமைச்சர் ரோஜா
பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் ஜெகன்மோகன் ரெட்டியை தோற்கடிக்க முடியாது என ஆந்திரா அமைச்சர் ரோஜா கூறியுள்ளார்.
மக்களவை மற்றும் ஆந்திர சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வர உள்ள நிலையில் திருப்பதியில் அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பேட்டியளித்த ரோஜா, ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பொறுப்பேற்ப இருப்பது உறுதி என்றார்.
Comments