மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான பங்கீடு முடிவானது : பாஜக
ஆந்திராவில் பாஜக -சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் தெலுங்குதேசம் 17 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் ஜனசேனா கட்சி 2 இடங்களில் போட்டியிட உள்ளதாக சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலுடன் மாநில சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளதால் அதற்கான தொகுதிப் பங்கீடும் முடிவாகியுள்ளது.
அதன்படி 175 சட்டமன்றத் தொகுதிகளில் தெலுங்குதேசம் 144 இடங்களிலும் பாஜக 10 இடங்களிலும் ஜனசேனா 21 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
Comments