BTS பாடலுக்கு அடிமையாகும் கல்லூரி மாணவிகள் விபரீதம்.. உஷார் பெற்றோர்களே.. உஷார்..! கொரிய பாடல் அடிமைகள் செய்யும் சேட்டைகள்
BTS என்ற கொரிய பாடலுக்கு அடிமையாகி அந்த வீடியோக்களை செல்போனில் இடைவிடாமல் பார்ப்பதை வழக்கமாக்கிய கல்லூரி மாணவி ஒருவர், தனக்கு அந்த பாடலில் வரும் கொரிய பாடகர்கள் போல மணமகன் தேடுவதாக மனநல ஆலோசகர் ஒருவர் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்
ஒரு காலத்தில் இளையராஜாவின் இசைக்கு அடிமையாகி கிடந்த நம் தமிழ் இளைய சமுதாயம்.... கடந்த சில ஆண்டுகளாக இறைச்சல் இசைக்கும், இடைவிடாத ஆட்டத்துக்கும் பெயர் போன BTS என்ற கொரிய பாடல்களுக்கு அடிமையாகி கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
RM, Jin, SUGA, j-hope, Jimin, V, Jung Kook என அவங்க மொத்தம் ஏழு பேரு... தென் கொரியாவை சேர்ந்த அந்த இளம் இசைக்கலைஞர்களின் நடனமும் பாடலும் 2K கிட்ஸ் பலரது தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது
காலத்துக்கு ஏற்ப இசை ரசனை மாறக்கூடியது என்றாலும், மொழி கடந்து நேசிக்கும் அளவுக்கு BTS குழுவினரின் நடன அசைவுகள், உடைகள், சிகை அலங்காரம் போன்றவை இளசுகளை வெகுவாக கவர்ந்து விட்டது என்றே சொல்லலாம்
இந்த நிலையில் இந்த BTS குழுவினரின் வீடியோ பாடலை கடந்த சில வருடங்களாக மணிகணக்கில் பார்த்து வந்த கல்லூரி மாணவி ஒருவர் தான் மணந்தால் அந்த வீடியோவில் வரும் நபரை போன்ற ஒருவரைத்தான் மணப்பேன் என்று சொல்ல அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கொரிய மாப்பிள்ளைக்கு எங்கே செல்வது ? என்று மனநல ஆலோசகரை நாடி உள்ளனர்
படிப்பையும் எதிர்காலத்தையும் மறந்து , BTS மோகத்தில் அடிமையாக இருந்த அந்த கல்லூரி மாணவிக்கு உரிய அறிவுரைகளை கூறி இயல்பு நிலைக்கு மீட்டுக் கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார் மனநல ஆலோசகர் இளையராஜா,
ஒருவர் இருவர் அல்ல பல கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் செல்போனில் தொடர்ந்து BTS குழுவினரின் நடனங்களை பார்த்து அதில் இருந்து விடுபட இயலாமல் அதற்கு அடிமையாகி தன்னிடம் சிகிச்சைக்கு வருவதாகவும் இளையராஜா தெரிவித்தார்
இணையத்தில் வரும் எந்த ஒருவிளையாட்டாக இருந்தாலும், ஆரம்பத்தில் பொழுதுபோக்குதானே என நினைத்து விளையாடலாம். அதையே 45 நிமிடங்களுக்கு மேல் பயன்படுத்துவதை வாடிக்கையாக்கினால் அந்த செயலுக்கு அடிமையானதாக அர்த்தம் என்று சுட்டிக்காட்டும் இளையராஜா, இடைவிடாத செல்போன் பயன்பட்டால் இன்றைய இளைஞர்களில் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாகி வருவதாக வேதனை தெரிவித்தார்.
Comments