‘கஜினியின் ஒரிஜினல்’ அசல் படைப்பாளி கிறிஸ்டோபர் நோலன்..! ஓப்பன் ஹெய்மருக்கு 7 ஆஸ்கர் விருதுகள்

0 594

ஓப்பன் ஹெய்மர் என்ற ஆங்கில படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள நிலையில் அந்த படத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு

கிராபிக்ஸ் காட்சிகளையும், பிரமாண்ட அரங்குகளையும் நம்பி சினிமா எடுக்கும் ஹாலிவுட்டில் உணர்வு பூர்வமான எழுத்துக்களால், காட்சி அமைப்புகளால் ரசிகர்களை கவரும் வித்தை தெரிந்த இயக்குனர்களின் மிக முக்கியமானவர் கிறிஸ்டோபர் நோலன் ..!

அந்தவகையில் ஜப்பான் மீது அணு குண்டு வீசப்பட்டதன் தொடர்ச்சியாய் நிகழ்ந்த விபரீதங்களை உணர்ச்சி மிக்க காட்சிகளால் ‘ஓப்பன் ஹெய்மர்’ படத்தில் காட்சிப்படுத்தி இருந்தார் நோலன்..!

அணுகுண்டின் தந்தை என்றழைக்கப்படும் ராபர்ட் ஓபன்ஹெய்மரின் சுயசரிதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஓபன்ஹெய்மர் படத்தில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக தனது கூர்மையான எழுத்துக்களால் படத்துக்கு உயிரூட்டி இருந்த நோலன், சொல்ல வந்த ஒன் லைன் கருத்து இது தான்.. “எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பால் எதிர்காலத்தில் கேடு நிகழ்ந்தாலும், அதற்கு அதனை கண்டுபிடித்த விஞ்ஞானிகளும், அறிஞர்களுமே பொறுப்பு ஏற்க வேண்டும்” என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் நோலன்..!

11 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த ஓப்பன் ஹெய்மர் படம் சிறந்த இயக்குனர் , சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் சிலியன் மர்பி, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த துணை நடிகர், சிறந்த எடிட்டிங், சிறந்த ஒரிஜினல் இசை ஆகிய பிரிவுகள் என 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.

இத்தனை பெருமைக்குரிய இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கும், தமிழ் சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் தமிழ் மற்றும் இந்தியில் இயக்கிய கஜினி படத்தில் இடம் பெற்ற பெரும்பாலான காட்சிகள்.. கிரிஸ்டோபர் நோலன் இயக்கிய மெமண்டோ என்ற ஆங்கில படத்தில் இருந்து அப்பட்டமாக சுட்டவை..!

தன் அனுமதி இல்லாமலேயே தனது படக்காட்சிகளை திருடி சிலர் புதிய படங்களை உருவாக்குவதாக கிறிஸ்டோபர் நோலனே தன்னிடம் ஆதங்கம் தெரிவித்ததாக பாலிவுட் நடிகர் அனில்கபூர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments