காங் தேய்கிறது.. வி.சி.க வளர்கிறது.. திமுகவுக்கு 22 சீட்டு தான்..! திருமாவின் தேர்தல் கணக்கு

0 918

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வளர்ந்து விடக்கூடாது என்று 2 தொகுதிகளுக்கு மேல் கூட்டணியில் கொடுக்கவில்லை என்றும், ஒரு காலத்தில் 30 முதல் 20 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தற்போது மாநிலக் கட்சியிடம் 10 சீட்டு வாங்கிக் கொண்டிருப்பதாகவும்  திருமாவளவன் விமர்சித்துள்ளார். 

சென்னை சைதாப்பேட்டையில் "அனைத்து கல்லூரி அரசு விடுதி முன்னாள் மாணவர் சங்க துவக்க விழாவில் பங்கேற்று பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன்,

அரசியல் களத்தில் விடுதலை சிறுத்தைகள் ஏன் திமுக உடன் ஒட்டிக்கொண்டு இருக்க வேண்டும்,ரெண்டு சீட்டுக்கு ஏன் நிக்க வேண்டும் என பேசுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியினருக்கு 10 தொகுதிகள் ,விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெறும் 2 தொகுதிகள் தான் என விமர்சனம் செய்யும் போது லாஜிக் நல்லாயிருக்கு என்ற திருமாவளவன்,
காங்கிரஸ் கட்சிக்கு ஏன் 10 சீட் கொடுக்கப்பட்டது காங்கிரஸ் கட்சி ஆண்ட கட்சி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி செய்த கட்சி அன்றைக்கு காங்கிரஸ் கட்சி மாநில கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கிட்டு கொடுத்தது.

இன்று மாநில கட்சிகள் இடம் காங்கிரஸ் கட்சி வாங்கிக் கொண்டு இருக்கிறது. 20 30 இடங்களில் போட்டியிடக் கூடிய தேசிய கட்சி இன்று வெறும் 10 இடங்களில் தான் போட்டியிடுகிறது.

காங்கிரஸ் கட்சியின் கிராப் கீழ்நோக்கி இறங்கி கொண்டிருக்கிறது. விசிக மேல் நோக்கி போகிறோம் என்றார்

விடுதலை சிறுத்தைகள் கட்சி பரந்த பார்வை கொண்ட ஒரு கட்சியாக இருந்தாலும், அடிப்படையில் திருமாவளவன் யார் என்று பார்க்கிறார்கள்....

இவர்கள் ஒரு சக்தியாக வளர்ந்தார்கள்? என கேள்வி எழுப்புகிறார்கள். இவர்களை எதிர்ப்பவர்கள் நமது கட்சியையும் எதிர்ப்பார்களே என்ற கவலை திமுகவிற்கு உள்ளது. விசிக வை ஊக்கப்படுத்தினால் திமுகவிற்கு வாக்களிப்பவர்கள் கூட வாக்களிக்காமல் போய்விடுவார்களோ என்ற எதார்த்தத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது.

இரண்டு தொகுதிகளில் இருந்து மூன்று தொகுதிகளாக கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுவதை விட,இரண்டு தொகுதிகளில் இருந்து ஒரு தொகுதியாக குறையவில்லை என்பதே விசிக வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றார் திருமாவளவன்

கடந்த தேர்தலில் திமுக 24 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் நின்றது, ஆனால் இந்த முறை 22 இடங்களில் தான் உதயசூரியன் சின்னத்தில் நிற்கிறது இரண்டு இடங்களில் உதயசூரியன் குறைந்துள்ளது ஆனாலும் விசிக தொடர்ந்து இரண்டு இடங்களில் போட்டியிடுகிறது என்றார்

தேர்தல் கணக்கு மிகவும் சிக்கலானது திமுக ஏன் விசிக விற்கு மூன்று தொகுதிகள் கொடுக்கக் கூடாது மூன்று தொகுதிகள் கொடுக்காத திமுகவுடன் விசிக ஏன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று பேசுகிறார்கள்.

விசிகவிற்கு மூன்றாவதாக ஒரு தொகுதியை கொடுக்க திமுக தயங்குகிறது. இதற்காக நாம் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் அல்லது இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறினால் கூட்டணி பலவீனமாக நாம் காரணமாக இருந்து விடுவோம்.

நான் திமுக கூட்டணியில் இருந்து பிரிந்து வர வேண்டும் என்பதற்காகத்தான் எல்லோரும் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றார்

திருமாவளவன் 50 கோடி வாங்கிவிட்டார் 100 கோடி வாங்கி விட்டார்.

யார் இந்த ஆதவ் அர்ஜுன் அவர் பிஜேபி அனுப்பிய ஆள் அவர்தான் ஸ்லீப்பர் செல் என விமர்சனம் செய்துகொண்டு உள்ளனர் அது எல்லாம் பொய் என்றார் திருமாவளவன்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments