ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தாரா மோடி?
ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடிக்கு இருக்கும் தனிப்பட்ட நட்பின் காரணமாக உக்ரைன் மீதான அணு ஆயுதத் தாக்குதல் தவிர்க்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போரை நிறுத்தும்படி புதினை வலியுறுத்தும்படி மோடிக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
1945ம் ஆண்டு ஹிரோஷிமா நாகசாகி ஆகிய ஜப்பானிய இரட்டை நகரங்களின் மீது அணுகுண்டு வீசப்பட்டு பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
அதன் பிறகு எந்த நாடும் அணுகுண்டுகளை பயன்படுத்தவில்லை.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதத்தைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்திருந்தது.
இதனைத் தவிர்க்க ரஷ்யாவிடம் நெருக்கமாக உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது.
இதன் விளைவாக பிரதமர் மோடி புதினுடன் பேச்சு நடத்தி ரஷ்யாவின் அணு ஆயுதத் தாக்குதலை தடுத்ததாகக் கூறப்படுகிறது.
Comments