ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் 7 விருதுகளைக் குவித்தது ஓபன்ஹெய்மர் திரைப்படம்

0 597

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓபன்ஹெய்மர் திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 96-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

உலகளவில் பிரபலமான திரை நட்சத்திரங்கள் பலர் விழாவில் பங்கேற்றனர்.

சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'ஓபன்ஹெய்மர்' படம் வென்றது. 'அணுகுண்டின் தந்தை' என அழைக்கப்படும் ராபர்ட் ஜெ. ஓப்பன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட அப்படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் சிறந்த இயக்குநருக்கான விருதையும், சிலியன் மர்ஃபி சிறந்த நடிகருக்கான விருதையும், ராபர்ட் டவுனி ஜூனியர் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் வென்றனர்.

சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட 7 பிரிவுகளில் ஓப்பன்ஹெய்மர் விருதுகளை வென்றது.

சிறந்த நடிகைக்கான விருதை புவர் திங்ஸ் படத்திற்காக எம்மா ஸ்டோனும், சிறந்த துணை நடிகைக்கான விருதை தி ஹோல்ட்ஓவர்சுக்காக டேவின் ஜோய் ரண்டோல்ஃபும் வென்றனர்.

சிறந்த விசுவல் எஃபட்ஸ்-க்கான விருதை Godzilla Minus One திரைப்படமும், சிறந்த வெளிநாட்டு படத்திற்கான விருதை பிரிட்டனின் The Zone of Interest படமும், அனிமேசன் படத்திற்கான விருதை The Boy and the Heron படமும் பெற்றது.

உக்ரைன் போரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 20 Days in Mariupol படத்துக்கு சிறந்த ஆவணப் படத்திற்கான விருது வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments