சந்திரயான் - 4 திட்டத்திற்கு 2 ராக்கெட்டுகளை ஏவ இஸ்ரோ திட்டம்
நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான் - 4 திட்டத்திற்காக எல்.வி.எம்.-3 மற்றும் பி.எஸ்.எல்.வி. ஆகிய இரு ராக்கெட்டுகளை பயன்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், விண்கலத்தை நிலவில் தரையிறக்கி மண் மற்றும் பாறைகளை சேகரித்துபின் மீண்டும் பூமிக்கு கொண்டுவந்து ஆய்வு செய்யும் வகையில் திட்டம் முன்னெடுக்க உள்ளதாக கூறியுள்ளார்.
2028ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தபட உள்ள அத்திட்டத்திற்காக வெவ்வேறு நாட்களில் இரு ராக்கெட்டுகள் ஏவப்பட உள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எல்.வி.எம். - 3 ராக்கெட் மூலம் உந்துவிசை கலன், நிலவில் தரையிறங்கும் கலன், மாதிரிகளுடன் புறப்படும் கலன் ஏவப்படும் என்றும் பி.எஸ்.எல்.வி. மூலம் பூமிக்குள் மீண்டும் தரையிறங்கும் மறுநுழைவு கலன் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
Comments