ஹைதியில் பிரதமர் பதவி விலகக் கோரி வன்முறையில் ஈடுபட்ட ஆயுதக்குழு
கரீபியன் கடல் நாடான ஹைதியில் ஆயுதம் தாங்கிய குழுக்களின் மோதலால் போர்ட் ஆவ் பிரின்ஸ் நகரமே கிரிமினல்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்திருப்பதாக ஐநா எச்சரித்துள்ளது.
பிரதமர் ஏரியல் ஹென்றி பதவி விலகக்கோரி ஆயுதக் குழுக்கள் அதிபர் மாளிகை மற்றும் போலீஸ் தலைமையகத்தை முற்றுகையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகரின் பெரும்பாலான சாலைகள் வன்முறையாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.
துப்பாக்கிச்சூடு, தீவைப்பு காரணமாக, சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்திருப்பதாகவும், பொதுக் கட்டடங்களில் அவர்கள் தஞ்சமடைவதாகவும் தெரிய வந்துள்ளது.
Comments