71வது மிஸ் வோர்ல்ட் 2024 பட்டம் வென்றார் செக் குடியரசு அழகி கிறிஸ்டினா

0 341

மும்பையில் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற 71வது உலக அழகிப் போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா (Krystyna Pyszkova) உலக அழகி பட்டத்தை வென்றார்.

பல்வேறு நாடுகளின் அழகிகள் போட்டியிட்ட இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் களமிறங்கிய சினி ஷெட்டி இறுதிச் சுற்றில் டாப் 8 வரை முன்னேறி எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய போதும் டாப் 4 சுற்றில் இடம் பெற முடியாமல் போட்டியில் இருந்து வெளியேறினார்.

இறுதியாக மிஸ் செக் பட்டம் பெற்றவரான கிறிஸ்டினா உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்

விழாவில் நடிகைகள் பூஜா ஹெக்டே, கீர்த்தி சனோன், சோனாக்சி சின்ஹா உள்ளிட்ட ஏராளமான திரைப்ட நட்சத்திரங்கள் கண்கவரும் ஆடைகளுடன் அணிவகுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments