மதியம் 12 மணி- மாலை 3 மணி வரையில் வெளியில் செல்ல வேண்டாம் : மத்திய சுகாதாரத்துறை நெறிமுறை
கோடைக் காலத்தில் பொதுமக்கள் அதிக நீர் அருந்த வேண்டும், பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் மதியம் 12 முதல் மாலை 3 மணி வரை வெயிலில் வெளியில் செல்ல வேண்டாமென மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறை வழங்கி உள்ளது.
உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட துணை சுகாதார இயக்குநர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில், அதீத வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, ORS பாக்கெட்டுகள், ஐவி திரவங்கள், ஐஸ் பேக்குகளையும் கையிருப்பில் வைத்திருக்க உத்தரவிட்டுள்ளது.
Comments