ஆன்மீக நடைபயணம் மேற்கொண்டCமீது தாக்குதல்

0 342

அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு நடைபயணம் மேற்கொண்ட பெண் துறவியை பரமக்குடி அருகே 8 பேர் கொண்ட கும்பல் தாக்கியது குறித்து சிசிடிவி பதிவுகளை சேகரித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிவராத்திரியை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள சிவன் கோயிலில் தரிசனம் மேற்கொண்ட 38 வயது பெண் துறவி ஷிப்ரா பதக், இன்று அதிகாலையில் தனது நடைபயணத்தை துவங்கினார்.

சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சென்ற போது காரில் வந்த கும்பல் அவரை வழிமறித்து தாக்கியதில் கையில் காயம் ஏற்பட்டதோடு, துறவியின் பாதுகாப்பிற்காக அவரை பின்தொடர்ந்து வந்த காரில் கட்டப்பட்டிருந்த ஆன்மீக கொடி மற்றும் கண்ணாடியையும் உடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments