போதை கடத்தல் மன்னன் ஜாபர் சிக்கியது எப்படி ? பணம் பெற்ற பிரமுகர்கள் கிலி..! அதிகாரி வெளியிட்ட பரபரப்பு தகவல்
போதை கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போதை கடத்தலில் கிடைத்த பணத்தை வைத்து அவர் என்ன வெல்லாம் செய்தார் என்பது குறித்தும் , அவருடன் தொடர்புடையவர்கள் குறித்தும் மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்
2000 ஆயிரம் கோடி ரூபாய் போதை பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதை பொருள் தடுப்பு போலீசாரால் தேடப்பட்டு வந்த கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் என்கிற அப்துல் ரஹ்மான் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசில் சிக்காமல் இருக்க புது புது சிம்கார்டுகளை பயன்படுத்தினாலும், அவர் பயன் படுத்திய செல்போனின் சிக்னலை வைத்து போலீசார் சாமர்த்தியமாக சுற்றிவளைத்து தட்டி தூக்கியதாக கூறப்படுகின்றது
அவரிடம் இருந்து திமுகவின் உறுப்பினர் அட்டையையும், எஸ்.டி.பி.ஐ கட்சி பிரமுகரின் விசிட்டிங் கார்டும் கைப்பற்றப்பட்டது
முகத்தை மூடி அழைத்துச்சென்ற ஜாபரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்திருப்பதாக மத்திய போதை பொருள் தடுப்பு காவல் உயர் அதிகாரி ஞானேஸ்வர் தெரிவித்தார்.
கடந்த 3 ஆண்டுகளில் 45 முறை உணவு பொருள் எனக்கூறி மெத்தபெடமைன் தயாரிக்க பயன்படும் மூலம் பொருளான சூடோபெட்ரினை ஜாபர் கடத்தி இருப்பதாகவும், தமிழ் நாடு, டெல்லி ஆகிய இடங்களில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு 3500 கிலோ வரை போதை பொருளை கடத்தியதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என்றார்
கடத்தல் மூலம் ஈட்டிய கோடிக்கணக்கான பணத்தை ஜாபர்சாதிக் , அரசியல், சினிமா, ஓட்டல்கள், ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையில் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்த அதிகாரிகள், போதை பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை முழுமையாக பயன்படுத்தி மங்கை என்ற படத்தை தயாரித்திருப்பதையும், சென்னையில் ஓட்டல்கள் தொடங்கி இருப்பதையும் சுட்டிக்காட்டினார்
போதை கடத்தல் பணத்தை அரசியல் பிரமுகர்களுக்கு நிதியாக கொடுத்திருப்பதும் ஏராளமான பிரமுகர்களுடன் ஜாபர் சாதிக் தொடர்பு வைத்திருப்பதாகவும் அவர்களை ஒவ்வொருவராக சம்மன் அனுப்பி விசாரிக்க இருப்பதாகவும் ஞானேஸ்வர் தெரிவித்தார்
மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினரில் வலையில் சிக்காமல் இருக்க திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து பதுங்கியிருந்த ஜாபர் சாதிக் சிக்கியுள்ளார்.
இந்த போதை பொருள் கடத்தல் மூலம் பெற்ற பணம் கோடிக்கணக்கில் திரையுலகிலும், அரசியலிலும் புழங்கி இருப்பதால இது குறித்து அமலாக்கத்துறை விசாரணையை முன்னெடுக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Comments