டிரக் மாஃபியா கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக்கை ஜெய்ப்பூர் சொகுசு விடுதியில் சுற்றிவளைத்து கைது

0 427

சென்னையில் உள்ள என்.சி.பி. அதிகாரிகள் கொடுத்த தகவலை அடுத்து, ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள சொகுசு விடுதியில் தலைமறைவாக இருந்த டிரக் மாஃபியா கும்பல் ஜாஃபர் சாதிக்கை வளைத்து பிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு போதை ரசாயனங்களை வெளிநாடுகளுக்கு கடத்திய வழக்கில் சிக்கியுள்ள ஜாஃபர் சாதிக் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யும் பணி நடந்துவருவதாகவும், பின்னர் டெல்லி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

ஜாஃபர் சாதிக் கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் குடோன் அமைத்து தனி நெட்வொர்க் மூலம் சென்னையிலிருந்து டெல்லிக்கு சூடோஎஃபிட்ரினை அனுப்பியது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

அதேபோல், ஜாஃபர் சாதிக்கின் பணப் பரிமாற்ற பட்டியலை தயார் செய்துள்ள என்.சி.பி அதிகாரிகள், அவரை காவலில் எடுக்க திட்டமிட்டுள்ள அதிகாரிகள், அவருக்கு உடந்தையாக இருந்த முக்கிய புள்ளிகள் குறித்தும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments