ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் மிகப் பெரிய பவளப்பாறைத் திட்டு காலநிலை மாற்றத்தால் பாதிப்பு
ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் மிகப் பெரிய பவளப்பாறைத் திட்டு, காலநிலை மாற்றத்தால் அதன் நிறத்தை இழந்து வருவதாக சுற்றுச்சூழலியலாளர்கள் கூறியுள்ளனர்.
கடுமையான வெப்பத்தால் பவளப்பாறைகளில் காணப்படும் கோடிக்கணக்கான நுண்ணிய உயிரினங்களில் ஏற்பட்டுள்ள மாற்றதே இதற்குக் காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
விதவிதமான வர்ணங்களில் காணப்படும் உயிரினங்கள் நிறத்தை இழந்து வெண்மையாக காட்சி அளிப்பதாகவும் காலநிலை மாற்றத்தால் பவளப்பாறைகளின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் தடைபடுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
Comments