சிறுமி படுகொலையை கண்டித்து கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தம்

0 316

சிறுமி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து  புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

போதை பொருளை கட்டுப்படுத்தவில்லை என்றும், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும் கூறி இந்தியா கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடலூரில் இருந்து சென்னை செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளும், திண்டிவனம் வழியாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments