கந்து வட்டி கொடுமையால் மருந்தக உரிமையாளர் தற்கொலை

0 391

கந்து வட்டி கொடுமையால், தமது கணவர் தற்கொலை செய்துகொள்ள காரணமான நபரை கைது செய்யக்கோரி அவரது மனைவி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்தார்.

சென்னை ஆதம்பாக்கத்தில் மருந்தகம் நடத்திவந்த சரவணன், 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது நாஞ்சில் மணி என்பவரிடமிருந்து 18 லட்ச ரூபாய் கடனாக பெற்றதாகவும், அதற்கான வட்டியை செலுத்த முடியாததால் சரவணனை 9 முறை 25 லட்ச ரூபாய்க்கு சீட்டு எடுக்கச் சொல்லி அதன்மூலம் இரண்டரை கோடி ரூபாய் வரை நாஞ்சில் மணி வசூலித்ததாகவும் அவரது மனைவி புஷ்பா தெரிவித்தார். 

ஒரு கட்டத்தில் வட்டி கட்ட முடியாமல் போனபோது, நாஞ்சில் மணி மிரட்டல் விடுத்ததால் மனமுடைந்த சரவணன் கடந்த 3-ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக புஷ்பா கதறி அழுதபடி  கூறினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments