சரித்திர பதிவேடு குற்றவாளியை வீடு புகுந்து கடத்திய 4 பேர் கும்பல் வெட்டி சாலையில் வீசியவர்கள் கைது...

0 307

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில், 22 வயது சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரை காரில் கடத்திச் சென்று, உடலை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்தது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர். ஸ்டீபன் என்பவரை 4 பேர் வீடு புகுந்து கடத்திச் சென்றதாக அவரது பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் நிறுத்தப்பட்டிருப்பதை கவனித்த போலீசார், அதன் அருகே கைகளும், தலையும் வெட்டப்பட்ட நிலையில் ஸ்டீபனை சடலமாக மீட்டனர்.

அங்கிருந்து தப்பி ஓட முயன்ற 4 பேரில் 2 பேரை பிடித்ததாகவும், அவர்கள் மது போதையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments