புதுச்சேரியில் கடத்திக் கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் நல்லடக்கம்

0 414

புதுச்சேரியில் கடத்திக் கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதற்காக சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடுகாட்டுக்கு சிறுமியின் உடல் இருந்த கண்ணாடி பேழையை உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் சுமந்து சென்றனர். இறுதி ஊர்வலம் நடந்த வழிநெடுக பொது மக்கள் சிறுமிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

இறுதி ஊர்வலத்தின்போது போதைப்பொருட்களுக்கு எதிராக பொதுமக்களும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க சிறுமியின் உறவினர்களும் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

பாப்பம்மாள் கோயில் சுடுகாட்டில் பெற்றோரின் அழுகுரலுக்கு மத்தியில் சிறுமியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

சிறுமியின் புத்தகப் பை மற்றும் பொம்மைகளும் உடலுடன் அடக்கம் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments