கிருஷ்ணகிரில் குழந்தை கடத்தல் வதந்தியை நம்பி வட மாநில இளைஞர்கள் மீது தாக்குதல் 3 பேர் படுகாயம், 8 பேர் கைது

0 273

கிருஷ்ணகிரி அருகே, வட மாநிலத்தவர் குழந்தை கடத்தலில் ஈடுபடுவதாக சமூக வலை தளங்களில் பரவிய வதந்தியை நம்பி வட மாநில இளைஞர்களைத் தாக்கிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

செம்மட முத்தூர் கிராமத்தில் குப்பை பொறுக்கிக்கொண்டிருந்த வடமாநில இளைஞர்கள் 3 பேருக்கும், துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

வட மாநிலத்தவர் குழந்தை கடத்தலில் ஈடுபடுவதாக அப்பகுதியில் வதந்திகள் பரவிவந்த நிலையில், இவர்களும் குழந்தை கடத்த வந்துள்ளதாக நினைத்து 50க்கும் மேற்பட்டோர் அவர்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், போலீஸ் விசாரணையில் வதந்தியை நம்பி கிராம மக்கள் தாக்கியது தெரியவந்தது.

அதில் தொடர்புடைய 8 பேரை கைது செய்த போலீசார், தாக்குதல் வீடியோவில் இடம்பெற்றிருந்த 50 பேரை 4 தனிப்படைகள் அமைத்து தேடிவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments