சந்திரயான் 4 விண்கலத்தின் பணிகள் குறித்த சில தகவல்களை வெளியிட்ட இஸ்ரோ தலைவர் சோம்நாத்

0 2755

சந்திர மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரித்து, பூமிக்கு பத்திரமாக திருப்பி கொண்டு வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான் 4 விண்கலத்தின் பணிகள் குறித்த சில தகவல்களை கருத்தரங்கு ஒன்றில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் வெளியிட்டார்.

சாஃப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்குவது மட்டுமல்லாது ரெகோலித் எனப்படும் பாறைகள் மற்றும் மண்ணின் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் வகையில் 5 விண்கலத் தொகுதிகளுடன் சந்திரயான் 4 விண்கலம் அமைக்கப்பட்டுள்ளது.

2 கட்டங்களாக இவை ஏவப்பட உள்ள நிலையில் எல்விஎம்-3 மூலம், ப்ராபல்ஷன் மாட்யூல், டிசெண்டர் மாட்யூல் மற்றும் அசெண்டர் மாட்யூல் ஆகியவை முதலில் அனுப்பப்படும்.

அவை சேகரிக்கும் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வர டிரான்ஸ்பர் மாட்யூல் மற்றும் ரீ-என்ட்ரி மாட்யூல் ஆகியவை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 2 ஆவதாக ஏவப்படும்.

இந்த திட்டம் நிறைவேறினால் நிலவிலிருந்து பூமிக்கு சாம்பிள்களை கொண்டு வந்த உலகின் நான்காவது நாடாக இந்தியா இருக்கும் என சோம்நாத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments