பூட்டோ கொலை வழக்கு நியாயமாக நடைபெறவில்லை - பாக். உச்ச நீதிமன்றம்
கொலைக் குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் பிரதமருமான சுல்ஃபிகர் அலி பூட்டோவின் கொலை வழக்கு நியாயமான முறையில் நடைபெறவில்லை என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் தலைமை நீதிபதி காஸி ஃபேஸ் இஸா தலைமையிலான 9 பேர் கொண்ட பெஞ்ச் அளித்த தீர்ப்பில், ஒவ்வொரு தனி நபருக்கும் உள்ள மனித உரிமையை லாகூர் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் பூட்டோவுக்கு வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ள பூட்டோவின் பேரனும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவருமான பிலாவல் பூட்டோ ஜர்தாரி, இந்தத் தீர்ப்புக்காக மூன்று தலைமுறைகளாக காத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
Comments