24 காரட் தங்க பவுடர் கலந்த சிறப்பு பருப்பு குழம்பு

0 527

துபாயில் உள்ள உணவகம் ஒன்றில்  'தால் கஷ்கான்' என்ற பெயரில் பருப்பு குழம்பில் 24 காரட் தங்க பவுடர் கலக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்பட்டு வருகிறது.

அங்குள்ள பிரபலமான சிட்டி மாலில், புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரான ரன்வீர் பிரார் நடத்தி வரும் உணவகத்தில் இப்படி ஒரு குழம்பு பரிமாறப்படுகிறது.

ஒரு மரப்பெட்டியில் பிரத்யேகமாக கொண்டு வரப்பட்டு, வாடிக்கையாளர்கள் கண் முன்பே தங்க பவுடர் கலந்த கரைசல் பருப்புடன் சேர்த்து நெய் கலந்து வழங்குகின்றனர்.

இந்த சிறப்பு உணவின் விலை இந்திய மதிப்பில் ஆயிரத்து 300 ரூபாய் ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments