வீரர்களின் போர் ஒத்திகையை பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங் உன்
வடகொரியாவின் மேற்கு பிராந்தியம் பகுதியில் நடைபெற்று வரும் போர் ஒத்திகை பயிற்சிகளை ஆய்வு செய்த அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், போருக்கான அதிதீவிர நிலையில் துருப்புகள் தயாராக இருக்க வேண்டுமென உத்தரவிட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கடந்த 4ம் தேதியன்று கூட்டு போர் பயிற்சி மேற்கொண்ட நிலையில், இந்த பயிற்சி நடைபெற்றது.
இலக்குகளை குறிபார்த்து சுடுதல், ஹெலிகாப்டரிலிருந்து கீழே இறங்குதல் ஆகிய பயிற்சிகளை பார்வையிட்ட கிம் ஜாங் உன், படைவீரர்களுடன் கலந்துரையாடி தற்போதைய தேவைக்கேற்ப போர் உத்திகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
Comments