பெண்களுக்கு அங்கீகாரம் என்ற நோக்கோடு பிரதமர் செயல்படுவதாக விஜயதாரணி பேச்சு
பெண்களுக்கு தலைமை பண்பு இருப்பதாக நம்பாத ஒரு கட்சியில் இருந்து வெளியே வந்து, முன்னேற்ற பாதையை நோக்கி சென்றிருப்பதாக முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கூறியுள்ளார்.
தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, தன் பயணம் எப்படி அமைய வேண்டும் என்பதை பாஜக முடிவு செய்யும் என்று பதிலளித்தார்.
Comments