கடலில் விழுந்து மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி - அமெரிக்க நிறுவனம் விருப்பம்
தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்து மாயமானதாகக் கூறப்படும் மலேசியன் ஏர்லைன்ஸின் MH370 விமானத்தை தேடுவதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெக்ஸாஸில் உள்ள கடல் ரோபோடிக்ஸ் நிறுவனமான ஓஷன் இன்ஃபினிடி, கடலடி ஆய்வை மேற்கொள்ள விரும்பம் தெரிவித்து மலேசிய அரசிடம் திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
கடலாய்வுப் பணியில் புதிய நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கியிருப்பதாகவும், விமானத்தைத் தேடும் பணியில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும் எனவும் அந் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஆலிவர் பிளங்கெட் தெரிவித்தார்.
2014-ஆம் ஆண்டு,மார்ச் 8-ஆம் தேதி, 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங் சென்ற விமானம் திடீரென மாயமானது.
Comments