'ஒப்பன்ஹைமர்' திரைப்படம் ஆஸ்கர் விருது வெல்லும் என எதிர்பார்ப்பு... புற்றுநோய் பாதிப்பு குறித்து காட்சி இடம்பெறவில்லை என நோயாளிகள் வேதனை

0 300

உலகின் முதல் அணு குண்டு உருவாக்கப்பட்டதை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஒப்பன்ஹைமர் திரைப்படத்தில், அணு குண்டு சோதனையின்போது வெளிப்பட்ட கதிர்வீச்சால் புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் குறித்து எந்த ஒரு காட்சியும் இடம்பெறவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்தனர்.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஒப்பன்ஹைமர் திரைப்படம் இந்தாண்டு ஆஸ்கர் விருது வெல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நியூ மெக்சிக்கோ மாநிலத்தில் உள்ள ஒரு பாலைவனத்தில் 1945 ஆம் ஆண்டு அணு குண்டு சோதனை நடைபெற்றபோது, 80 கிலோமீட்டர் சுற்றளவில் வசித்த பலருக்கு புற்றுநோய் ஏற்பட்டதாகவும், அவர்களுக்கு அரசு சார்பில் எந்த ஒரு இழப்பீடும் வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments