மக்களவைத் தேர்தலுக்கு அழியாத மை தயாரிப்பு பணி 70 ச தவீதம் நிறைவு..!
மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களின் விரலில் வைக்கப்படும் மை தயாரிக்கும் பணி 70 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மைசூர் பெயின்ட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கான அழியாத மை தயாரிப்பில், 1962ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு நிறுவனமான மைசூர் பெயின்ட்ஸ் ஈடுபட்டுள்ளது.
மக்களவை பொதுத் தேர்தலுக்கு 55 கோடி ரூபாய் செலவில் 26 லட்சத்து 55 ஆயிரம் பாட்டில் அழியாத மை தேவைப்படுகிறது. ஒரு பாட்டில் மையைக்கொண்டு 700 வாக்காளர்களின் விரலில் பதிவிட முடியும். கடந்த மக்களவை தேர்தலின்போது 160 ரூபாய் செலவில் ஒரு பாட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில், தற்போது 174 ரூபாய் செலவாகிறது என மைசூர் பெயின்ட்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
Comments