தொழில்நுட்பக் கோளாறால் ஃபேஸ்புக், இன்ஸ்டா உலகம் முழுவதும் ஒரு மணி நேரம் முடக்கம்

0 453

பல்வேறு நாடுகளில் சுமார் ஒருமணிநேரம் ஃபேஸ் புக் ,இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்கள் முடங்கின.

சில இடங்களில் 2 மணி நேரம் வரை செயல்படாத நிலையில், தங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டதோ என்று பதிவர்கள் கருதினர்.

இந்தியாவிலும் சுமார் இரவு 8.30 மணி முதல் ஃபேஸ்புக், இன்ஸ்டா ஆகியவை முடங்கின.

ஆனால் பிரச்சினையை உடனடியாக சரி செய்துவிட்டதாக மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஆன்டி ஸ்டோன் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருந்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments