மெட்டல் டிடெக்டரைப் பயன்படுத்தி 67 சவரன் நகை கொள்ளை

0 342

கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.வி.பாளையத்தில், மெட்டல் டிடெக்டர் மூலமாக தங்க நகைகள் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரசுப் பேருந்து நடந்துநர் அருள்ஜோதி வீட்டில் 67 சவரன் நகை, 23 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வளவனூரைச் சேர்ந்த கொள்ளையன் மாரி அவனது கூட்டாளி உதயாவை கைது செய்த போலீஸார் அவர்கள் உருக்கி வைத்திருந்த 25 சவரன் தங்கம், 2 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments