ராமநாதபுரத்தின் மண்டபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.108 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

0 395

இலங்கைக்கு கடத்துவதற்காக படகில் எடுத்துச் செல்லப்பட்ட 108 கோடி ரூபாய் மதிப்புக் கொண்ட 99 கிலோ பழுப்பு நிற ஹசிஷ் போதைப் பொருளை ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

கடத்தல் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மன்னார் வளைகுடாவில் சந்தேகத்திற்குரிய மீன்பிடி படகை ஆய்வு செய்த புலனாய்வு பிரிவினர், 5 சாக்கு மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த போதைப்பொருளை கைப்பற்றியதக தெரிவித்தனர்.

படகிலிருந்த 3 பேரை கைது செய்து நடத்திய விசாரணையில் கரையிலிருந்த ஒருவர் போதைப் பொருட்களை கொடுத்து நடுக்கடலில் மற்றொரு படகிற்கு மாற்றச் சொன்னதாக தெரிவித்தனர். அந்த நபரையும் கைது செய்து புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments