மே மாதம் பத்தாம் தேதிக்குப் பிறகு மாலத்தீவில் எந்த இந்திய ராணுவ வீரரும் தங்கியிருக்க அனுமதி இல்லை - அதிபர் முய்ஸு
மே மாதம் பத்தாம் தேதிக்குப் பிறகு மாலத்தீவில் எந்த இந்திய ராணுவ வீரரும் தங்கியிருக்க அனுமதி இல்லை என அம்நாட்டின் அதிபர் மொகமது முய்ஸு தெரிவித்துள்ளார்.
ராணுவ உடையோ அல்லது சாதாரண உடையோ, எந்தவித உடை அணிந்தும் இந்திய வீரர்கள் மாலத்தீவில் தங்கியிருக்க அனுமதிக்க மாட்டார்கள் என அவர் அறிவித்துள்ளார். அண்மைக் காலமாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சீனா மற்றும் இலங்கையுடன் அந்நாடு நெருக்கம் காட்டி வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, சீனாவிடம் இருந்து இலவச ராணுவ உதவிகளைப் பெறும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Comments