நரிக்குறவர் பெண்ணை தடியால் தாக்கிய நபர் மீது வன்கொடுமை உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது

0 298

உளுந்தூர்பேட்டையில், கடை வாசலில் அமர்ந்து சாப்பிட்ட நரிக்குறவர் பெண்ணை கட்டையால் தாக்கிய கடை- உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

வீட்டிலேயே இட்லி கடை நடத்திவரும் கலா, தமது கடையில் இட்லி வாங்கிய நரிக்குறவர் பெண் லட்சுமியை சற்று தொலைவு தள்ளி சென்று சாப்பிட சொன்னதாக கூறப்படுகிறது.

லட்சுமி கடை வாசலிலேயே அமர்ந்து சாப்பிட்டதால், ஆத்திரமடைந்த கலாவின் கணவர் அன்பழகன், மற்றவர்கள் கடைக்கு வரமாட்டார்கள் எனக்கூறி லட்சுமியை கட்டையால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

அந்த காணொலி சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அன்பழகன் மீது வன்கொடுமை உட்பட 5 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments