இருசக்கர வாகன சாவியை தொலைத்த நண்பனை கொன்ற 2 பேர் கைது... கஞ்சா வாங்க செல்ல முடியாத ஆத்திரத்தில் அடித்துக் கொன்றதாக தகவல்
சென்னை பெருங்களத்தூர் அருகே இருசக்கர வாகனத்தின் சாவியை தொலைத்த நண்பனை மது போதையில் கட்டையால் சரமாரியாக தாக்கி, முகத்தை சிதைத்து கொன்றதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த ஞாயிறன்று மயிலாப்பூரை சேர்ந்த சுமேஷ் தமது நண்பர்களான லோகேஷ் மற்றும் தயாகரனுடன் சேர்ந்து மது அருந்திய பின், மேலும் போதைக்காக கஞ்சா வாங்க முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.
அதற்காக புறப்பட எத்தனித்த போது லோகேஷின் இருசக்கர வாகன சாவி தொலைந்து விட்டதாக சுமேஷ் கூறியதால் அவரை மற்ற இருவரும் தாக்கியதாக போலிசார் தெரிவித்தனர்.
Comments