கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக்கும் சட்டம் - பிரான்ஸ் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் நிறைவேற்றம்
உலகிலேயே முதன்முறையாக கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக்கும் சட்டம் பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டம் பிரான்ஸில் 1975-ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள நிலையில், அது தொடர்ந்து நிலைநாட்டப்படும் என அதிபர் மேக்ரன் தெரிவித்திருந்தார்.
அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் அதனை அடிப்படை உரிமை ஆக்கும் சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. பிரான்ஸ் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர, இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஐந்தில் மூன்று பங்கு பெரும்பான்மை பெற வேண்டும்.
அதன்படி நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் கருக்கலைப்பு சட்டத்திற்கு ஆதரவாக 780 பேரும் 72 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
Comments