டியூசன் படிக்கும் மாணவனை வழிமறித்து தாக்குதல் - கொலை மிரட்டல்.. மாணவனின் தந்தையான துணை நடிகர் காவல் நிலையத்தில் புகார்

0 398

சென்னையில், தன் மகனைக் கடத்தி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோரி ரஜினி படத்தில் நடித்து வரும் துணை நடிகர் பிர்லா போஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பார்க்கிங் தகராறு காரணமாக வீட்டின் அருகே வசிக்கக்கூடிய சஞ்சய் என்ற கல்லூரி மாணவர் அவரது நண்பர்கள் 10 பேர் கொண்ட கும்பலோடு சேர்ந்து, தான் டியூஷன் முடித்துவிட்டு சென்றபோது வழிமறித்து தாக்கி விட்டு சென்றதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிசிடிவி ஆதாரங்களுடன் சிறுவனின் தந்தை மதுரவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments